என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » பரியேறும் பெருமாள்
நீங்கள் தேடியது "பரியேறும் பெருமாள்"
பா.இரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான பரியேறும் பெருமாள் திரைப்படம் பிரான்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது. #PariyerumPerumal
இயக்குனர் பா.இரஞ்சித் தயாரிப்பில் மாரிசெல்வராஜ் இயக்கத்தில்
பரியேறும் பெருமாள் படம் வெளியாகி வெற்றி பெற்ற பிறகும் வெளிநாடுகளில் பல திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு வருகிறது.
பல விருதுகளையும், பாராட்டுக்களையும் பெற்றுவரும் நிலையில், பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் திரைப்பட திருவிழாவில் திரையிடப்படுகிறது.
புதிய படங்கள் தியேட்டரில் வெளியாவதற்கு முன்பே இந்த விழாவில் படங்கள் திரையிடுவது வழக்கம். ஆனால் பரியேறும் பெருமாள் படம் வெளியாகி பல மாதங்களுக்குப்பிறகு இவ்விழாவில் திரையிடப்படுவது மகிழ்ச்சியை தருகிறது என்கிறார் இயக்குனர் மாரிசெல்வராஜ்.
கதிர், ஆனந்தி நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற பரியேறும் பெருமாள் திரைப்படம், தற்போது கன்னட மொழியில் ரீமேக்காக இருக்கிறது. #PariyerumPerumal
ரசிகர்களின் பேராதரவும், பத்திரிகையாளர்களின் பாராட்டும், திரைப்பட விழாக்களில் விருதுகளும் பெற்ற படம் ‘பரியேறும் பெருமாள்’. டைரக்டர் ரஞ்சித் தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கிய படம் இது.
இந்தப்படம் இப்பொழுது கன்னடத்திற்கு போகிறது. கன்னட மொழியில் தயாராகவிருக்கிறது. இந்தச் செய்தியை அறிந்த தமிழிலும், கன்னடத்திலும் முன்னணியில் இருக்கும் ஹீரோக்கள் போட்டி போட்டுக் கொண்டு நடிக்க முன் வந்தனர். ஆனால், இந்தப் படத்தை இயக்க விருக்கும் காந்தி மணிவாசகம் (களவாணி மாப்பிள்ளை - 2 படத்தை இயக்கியவர்)
இந்தப்படத்திற்கு இமேஜ் இல்லாத புதுமுக நடிகர் நடித்தால் கதைக்கு பொருத்தமாக இருக்கும் என்பதால் பல புதுமுக நடிகர்களை தேடி அலைந்தார். இறுதியாக மைத்ரேயா (ஏவிஎம் நிறுவனத்தின் மருமகன்) என்ற புதுமுக நடிகரை கதாநாயகனாக தேர்வு செய்திருக்கிறார்.
இவரை படத்தின் கதைக்களமாக விளங்கும் பெங்களூர் பகுதிகளிலும், அங்கு வாழும் சாதாரண மக்களின் வாழ்க்கையை ஒட்டி பழக வைத்தார். நடிகர் மைத்ரேயாவும் அந்த மக்களோடு மக்களாக இணைந்து அவர்களுடன் பழகி அவர்களின் பேச்சு, நடை, உடை, பாவனை அனைத்தையும் கற்றுக் கொண்டு வருகிறார். கன்னட பட உலகில் முன்னணியிலுள்ள கதாநாயகி, வில்லன் நடிகர், கதைக்கு ஏற்ற வகையில் உள்ள கலைஞர்களையும் தேர்வு செய்து வருகிறார்கள்.
விரைவில் இந்தப் படத்திற்கான துவக்க விழா பெங்களூரில் நடைபெறவிருக்கிறது.
அமெரிக்காவில் நடைபெறும் தலித் திரைப்படம் மற்றும் கலாச்சார திருவிழாவில் காலா, பரியேறும் பெருமாள் உள்ளிட்ட திரைப்படங்களும், கக்கூஸ் என்ற ஆவணப்படமும் திரையிடப்படுகிறது. #PariyerumPerumal #Kaala #Kakkoos
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் வரும் 23, 24-ந் தேதிகளில் முதலாவது ‘தலித் திரைப்படம் மற்றும் கலாச்சார திருவிழா 2019’ நடைபெற இருக்கிறது.
சர்வதேச அளவில் வெளியான தலித் சமூகம் சார்ந்த திரைப்படங்கள், ஆவணப்படங்களில் இருந்து முக்கியமான படங்கள் தேர்வு செய்யப்பட்டு இந்த விழாவில் திரையிடப்பட இருக்கிறது.
இதில் அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா ஆகிய தமிழ் படங்களை இயக்கிய பா.ரஞ்சித், சாய்ரத், ஃபான்றி படங்களை இயக்கிய மராத்தி இயக்குனர் நாகராஜ் மஞ்சுலே மற்றும் நடிகை நிஹாரிகா சிங் ஆகியோர் இந்தியாவில் இருந்து கவுரவிக்கப்படுகிறார்கள்.
தமிழில் வெளியான காலா, பரியேறும் பெருமாள் படங்களும், கக்கூஸ் ஆவணப்படமும் திரையிடப்பட இருக்கின்றன. மலையாளத்தில் இருந்து ‘பபிலியோ புத்தா’ திரைப்படம் இந்த திருவிழாவிற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில், ‘மாசான்’, ‘ஃபேண்ட்ரி’, ‘போலே இந்தியா ஜெய் பீம்‘ ஆகிய திரைப்படங்களும் இடம்பிடித்துள்ளன.
‘காலா’ திரைப்படத்தில் தலித்துகளுக்கான நிலம் சார்ந்த அரசியல் பேசப்பட்டது. பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் நெல்லை வட்டாரத்தில் சமூகத்தின் ஒரு அங்கமாகவே மாறிவிட்ட சாதிய அடக்குமுறை சார்ந்த காட்சிகள் அப்படியே முன்வைக்கப்பட்டன.
காலா படத்தை இயக்கிய ரஞ்சித் பரியேறும் பெருமாள் படத்தை தயாரித்து இருந்தார்.
இத்திரைப்படங்களுக்கு, ‘தலித் திரைப்படம் மற்றும் கலாச்சார திருவிழா 2019’ கவுரவம் வழங்கியுள்ளது. மலம் அள்ளும் தொழில் பற்றி திவ்யபாரதி இயக்கத்தில் ‘கக்கூஸ்’ தமிழ் ஆவணப்படத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது.
‘வி ஹேவ் நாட் கம் ஹியர் டூ டை’, ‘தி பேட்டில் ஆப் பீமா கோரேகான்’ உள்ளிட்ட மேலும் பல ஆவணப்படங்களும் இங்கு திரையிடப்பட உள்ளன. இதுதான் முதலாவது ஆண்டு, ‘தலித் திரைப்படம் மற்றும் கலாச்சார திருவிழா’ ஆகும்.
இதே கொலம்பியா பல்கலைக்கழகத்தில் தான் சட்ட மேதை அம்பேத்கர், 1927-ம் ஆண்டு, பொருளாதாரத்தில் பி.எச்டி பட்டம் பெற்றார். 1952-ம் ஆண்டு, அம்பேத்கருக்கு இந்த பல்கலைக்கழகம் கவுரவ பட்டம் வழங்கி கவுரவித்தது. #PariyerumPerumal #Kaala #Kakkoos #USInternationalFilmFestival
சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் ‘பரியேறும் பெருமாள்’, ‘96’ சிறந்த படங்களாக தேர்வு செய்யப்பட்டது. அமைச்சர் கடம்பூர் ராஜு இதில் கலந்து கொண்டு வெற்றியாளர்களுக்கு விருது வழங்கினார் #CIFF #ChennaiInternationalFilmFestival
சென்னையில் 16-வது சர்வதேச திரைப்படவிழா கடந்த 13-ந்தேதி தொடங்கியது.
இந்தோசினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் சார்பில் கடந்த 8 நாட்கள் நடந்த இந்த திரைப்பட விழாவில் 50-க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த 150-க்கும் அதிகமான திரைப்படங்கள் திரையிடப்பட்டன.
சென்னையில் தேவி, தேவி பாலா, அண்ணா, கேசினோ, தாகூர் திரைப்பட மையம், ரஷ்யக் கலாச்சார மையம் ஆகிய 6 அரங்குகளில் படங்கள் திரையிடப்பட்டன. இதன் நிறைவு விழா நேற்று மாலை நடைபெற்றது. அமைச்சர் கடம்பூர்ராஜூ இதில் கலந்து கொண்டு சிறந்த படங்களுக்கு பரிசுகளை அளித்தார்.
சிறந்த தமிழ்ப் படங்கள் வரிசையில் ‘96’, ‘அபியும் அனுவும்’, ‘அண்ணனுக்கு ஜே’, ‘ஜீனியஸ்’, ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’, ‘இரும்புத்திரை’, ‘கடைக்குட்டி சிங்கம்’, ‘மெர்குரி’, ‘பரியேறும் பெருமாள்’, ‘ராட்சசன்’, ‘வட சென்னை’, ‘வேலைக்காரன்’ ஆகிய 12 படங்கள் திரையிடப்பட்டன. சிறப்புத் திரையிடலாக ‘மேற்கு தொடர்ச்சி மலை’ திரையிடப்பட்டது.
‘பரியேறும் பெருமாள்’, ‘96’ ஆகியவை சிறந்த படங்களாகத் தேர்வு செய்யப்பட்டன. ‘பரியேறும் பெருமாள்’ படத்தின் தயாரிப்பாளர் பா.ரஞ்சித்துக்கு ரூ.1 லட்சமும், இயக்குநர் மாரி செல்வராஜுக்கு ரூ.2 லட்சமும் பரிசு அளிக்கப்பட்டது.
விஜய்சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியான ‘96’ படமும் சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டது. அந்த படத்தின் இயக்குனர் பிரேம்குமாருக்கும், தயாரிப்பாளர் நந்தகோபாலுக்கும் தலா ரூ.1 லட்சம் பரிசு அளிக்கப்பட்டது.
‘வட சென்னை’ படத்தின் இயக்கத்துக்காவும், ‘அண்ணனுக்கு ஜே’ படத்தின் தயாரிப்புக்காகவும் இயக்குநர் வெற்றிமாறனுக்கு நடுவர் குழுவின் சிறப்புப் பரிசு அளிக்கப்பட்டது. அவருக்கு ரூ.1 லட்சம் பரிசு அளிக்கப்பட்டது.
இது தவிர சிறந்த மாணவர் பட விருது வரிசையில் ஏஞ்சலினா படமும், ஈஸ்ட்மேன் கிராமம் படமும் தேர்வு செய்யப்பட்டன. ஆண்டுதோறும் அளிக்கப்பட்டு வரும் ‘அமிதாப் பச்சன் யூத் ஐகான்’ விருது இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணனுக்கு வழங்கப்பட்டது. #CIFF #ChennaiInternationalFilmFestival #PariyerumPerumal #96The Movie
மாரி செல்வராஜ் இயக்கத்தில் கதிர் - கயல் ஆனந்தி நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற ‘பரியேறும் பெருமாள்’ படத்தை பிரபல நிறுவனம் ஒன்று கைப்பற்றியுள்ளது. #PariyerumPerumal #Kathir
நீலம் புரொடக்சன்ஸ் சார்பில் பா.இரஞ்சித் தயாரிப்பாளராக அறிமுகமான படம் ‘பரியேறும் பெருமாள்’. இயக்குநர் ராமிடம் இணை இயக்குனராக பணியாற்றிய மாரி செல்வராஜ் இயக்கிய இந்த படத்தில் பரியேறும் பெருமாளாக, சட்டக்கல்லூரி மாணவர் கதாபாத்திரத்தில் கதிர் நடித்துள்ளார்.
கதிர் ஜோடியாக கயல் ஆனந்தியும், முக்கிய கதாபாத்திரங்களில் யோகி பாபு, லிஜீஷ், மாரிமுத்து மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் நடித்துள்ளனர்.
😎 #PariyerumPerumalWithVijayTV 😎 pic.twitter.com/SAwIkiKE4b
— Vijay Television (@vijaytelevision) December 13, 2018
சாதியை மையப்படுத்தி உருவாகியிருந்த இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. படமும் 50 நாட்களை கடந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடியது. இந்த நிலையில், படத்தின் தொலைக்காட்சி உரிமையை விஜய் டிவி வாங்கியிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. #PariyerumPerumal #Kathir #KayalAnandhi
பரியேறும் பெருமாள் படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்க இருப்பதாக அறிவித்திருக்கிறார். #Dhanush #PariyerumPerumal
பரியேறும் பெருமாள் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். இப்படத்தில் கதிர், ஆனந்தி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். பா.ரஞ்சித் தனது நீலம் புரொடக்ஷன்ஸ் மூலமாக இப்படத்தை தயாரித்திருந்தார்.
இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் ரஜினி, கமல் உள்ளிட்ட திரை நட்சத்திரங்களும், மு.க.ஸ்டாலின், திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் இப்படத்தை பார்த்து பாராட்டினார்கள்.
தற்போது இப்படத்தை தனுஷ் பார்த்து இயக்குனர் மாரி செல்வராஜ் மற்றும் படக்குழுவினரை பாராட்டியுள்ளார். மேலும் தனது அடுத்தப்படத்தை மாரி செல்வராஜ் இயக்க இருக்கிறார் என்றும் கூறியுள்ளார். இவர்கள் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க இருக்கிறார். #Dhanush
Finally watched pariyerum perumal. Mind blown.The rawness nd life style shown is so real it feels u r there. congrats 2 d entire team.Also wud like 2 announce dir Mari selvaraj will b doing his next film with me under @theVcreations so excited to work with a talent like him.
— Dhanush (@dhanushkraja) November 13, 2018
பா.ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படம் சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வாகியுள்ளது. #PariyerumPerumal
பா.ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான படம் ‘பரியேறும் பெருமாள்’. இதில் கதிர் நாயகனாகவும், ஆனந்தி நாயகியாகவும் நடித்திருந்தார்கள். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார்.
படத்தை பார்த்த கமல், ரஜினி உள்ளிட்ட திரை நட்சத்திரங்கள், ஸ்டாலின், திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், பொதுமக்கள், ரசிகர்கள் அனைவரும் வெகுவாக பாராட்டினார்கள்.
இருப்பினும் பரியேறும் பெருமாள் திரைப்படத்திற்கு குறைத்தளவு தியேட்டர்களே கிடைத்தது. இருந்தாலும் இப்படத்திற்கு மக்கள் அதிக ஆதரவு கொடுத்து வந்ததால் சில நாட்களிலேயே பல தியேட்டர்களில் அதிக காட்சிகள் போடப்பட்டது. பல ஊர்களிலும் வெளியானது. வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், தற்போது கோவா சர்வதேச திரைப்பட விழாவில் பரியேறும் பெருமாள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
Happy to share that #PariyerumPerumal movie has been selected for d 49th #IFFI - International Film Festival of India in #Goa -Indian Panorama section 🎉🎉🎉magizchi @mari_selvaraj@officialneelam@Music_Santhosh
— pa.ranjith (@beemji) October 30, 2018
கோவாவில் நடைபெறும் 49வது சர்வதேச திரைப்பட விழாவில் இந்தியன் பனோரமா பிரிவுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் பா.ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது படக்குழுவினரை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.
பா.இரஞ்சித் தயாரிப்பில் வெளியான பரியேறும் பெருமாள் படத்தை பார்த்த ரஜினி, பல இடங்களில் சிலிர்த்து விட்டேன் என்று பாராட்டி இருக்கிறார். #Rajini #PariyerumPerumal
இயக்குனர் பா.இரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி வெற்றிப்படமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘பரியேறும் பெருமாள்’. இதில் கதிர், கயல் ஆனந்தி, கராத்தே வெங்கடேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
திரைத்துறை சார்ந்தவர்கள், அரசியல்வாதிகள், விமர்சகர்கள், ஊடகங்கள் ரசிகர்கள், பொதுமக்கள் என அனைவரின் பாராட்டுக்களை பெற்ற பரியேறும் பெருமாள் படத்தை ரஜினிகாந்த் பார்த்துவிட்டு தயாரிப்பாளர் இரஞ்சித்திடமும், இயக்குனர் மாரிசெல்வராஜிடமும் வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார்.
மேலும், ‘ஒரு நாவலைப்போல திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறீர்கள். பல இடங்களில் நான் சிலிர்த்துவிட்டேன். மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கிறது. ஒரு அதிர்வை ஏற்படுத்திவிட்டீர்கள். படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்’ என்று தனது பாராட்டுக்களை தெரிவித்திருக்கிறார்.
பரியேறும் பெருமாள் படத்தில் எடிட்டராக பணியாற்றிய செல்வா, இப்படம் எனக்கு பெரிய திருப்புமுனையை தந்திருக்கிறது என்று கூறியிருக்கிறார். #PariyerumPerumal
இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் இமாலய வெற்றியடைந்து, சமூகத்தில் விவாதங்களையும் ஏற்படுத்தி இருக்கும் திரைப்படம் ‘பரியேறும் பெருமாள்’.
கதை மாந்தர்கள், கதைக்களம், கதை சொல்லும் பாங்கு, கதை கூறும் கருத்து என அத்தனையும் சேர்ந்து பார்வையாளர்களுக்கான முழு சினிமாவாக பரியேறும் பெருமாள் உருவாக திரைக்குப் பின்னால் உழைத்தவர்கள் பலபேர். இயக்குநர் மாரி செல்வராஜ், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், ஒளிப்பதிவாளர் ஸ்ரீஈதர், கலை இயக்குநர் ராமு, எடிட்டர் செல்வா ஆர்.கே ஆகியோரின் பங்கு மிக முக்கியமானது.
இவர்களில் குறிப்பாக படத்தொகுப்பாளர் செல்வா ஆர்.கே -வுக்கு மிகப் பெரிய திருப்புமுனையை ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படம் ஏற்படுத்தித் தந்திருக்கிறது.
அடிப்படையில் விசுவல் கம்யூனிகேசன் படித்தவரான செல்வா, பிரபல படத்தொகுப்பாளர் பிரவீன் கே.எல் இடம் ‘மங்காத்தா’ உள்ளிட்ட பத்திற்கும் மேற்பட்ட படங்களில் உதவியாளராக பணியாற்றியிருக்கிறார். பிறகு பா.இரஞ்சித் இயக்கிய ‘மெட்ராஸ்’ திரைப்படத்தில் அசோசியேட் எடிட்டராக பணிபுரிந்திருக்கிறார். பின்னர் ஜெயம் ரவி நடித்த ‘அப்பாடக்கர்’ படத்தின் மூலம் எடிட்டராக அறிமுகமானவர் ராஜா மந்திரி, காலக்கூத்து, கத்திச் சண்ட, இவன் தந்திரன் படங்களில் பணியாற்றியிருக்கிறார். இப்படி சீரான வேகத்தில் சென்று கொண்டிருந்தவரை "பரியேறும் பெருமாள்" ஜெட் வேகத்தில் பறக்கச் செய்திருக்கிறது.
இந்த உற்சாகத்தைப் பகிர்ந்து கொண்ட அவர், ‘இரஞ்சித் அண்ணா என்னைக் கூப்பிட்டு, "நீலம் புரடொக்சன்ஸ்" முதல் படம் பண்ண போறோம், இதுதான் ஸ்கிரிப்ட், ரொம்ப எமோசனலான ஸ்கிரிப்ட், முழுசா படிச்சிட்டு சொல்லு.. அப்படின்னு சொன்னார்.
இயக்குனர் மாரிசெல்வராஜிடம் ஸ்கிரிப்ட் வாங்கி படிச்சிட்டு போய், யார் அந்த அப்பா கேரக்டர் பண்ண போறாங்கன்னு கேட்டேன். மேலும், முழு ஸ்கிரிப்டும் படிச்சிட்டதால என்னால ஈசியா கனெக்ட் பண்ணிக்க முடிஞ்சது.
இயக்குனர் மாரிசெல்வராஜிடம் பேசிய பிறகு இப்படிப்பட்ட கதைக்காகத்தான் நான் காத்திருந்தேன் அதனால் எளிதாக ஆர்வத்துடன் வேலைசெய்ய ஆரம்பித்தோம். அதனால விசுவலா படம் எடிட்டிங் டேபிளுக்கு வரும் போது என்னால புரிஞ்சிகிட்டு வேலை பார்க்க முடிஞ்சது.
இயக்குநர் மாரி செல்வராஜ் எடிட்டிங்கிற்கு உட்காரும் போதே, அந்த காட்சியின் பிண்ணனியைக் குறித்தும், அதன் எமோஷன் குறித்தும் விளக்கி விடுவார். அது இன்னமும் எனக்கு வேலை செய்ய சுலபமாய் அமைந்தது.
இந்த வெற்றி எனக்கு பெரிய திருப்புனையையும், நம்பிக்கையையும் தந்திருக்கிறது. இந்த வாய்ப்பை எனக்கு ஏற்படுத்திக் கொடுத்த ரஞ்சித் அண்ணாவிற்கும், மாரி செல்வராஜுக்கும் எனது நன்றிகள்" என்றார்.
பா.ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படத்தின் வெற்றி கொண்டாடப்படுகிறது. #PariyerumPerumal #96Movie
மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் என்ற பட நிறுவனத்தின் சார்பில் எஸ் நந்தகோபால் தயாரித்து வெளியான திரைப்படம் 96. ஒளிப்பதிவாளராக இருந்த பிரேம்குமார் இந்த படத்தின் மூலம் இயக்குனராகியிருக்கிறார். இப்படத்தில் விஜய் சேதுபதி, திரிஷா, பக்ஸ், ஆடுகளம் முருகதாஸ், தேவதர்ஷினி, உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படம் வெளியாகி பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
இந்நிலையில் இப்படத்தின் வெற்றிக்கு காரணமான ரசிகர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் நண்பர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது.
இதில் விஜய் சேதுபதி பேசும்போது, ‘தமிழ் சினிமா மிகவும் ஆரோக்கியமாக இருக்கிறது. பரியேறும் பெருமாளின் வெற்றி கொண்டாடப்படுகிறது. சாதியின் தீவிரத்தையும், அதன் தீவிரவாதத்தையும் அழகியலுடன் சொல்லப்பட்ட படம் அது. பிரேம்குமார் என்ற ஒரு படைப்பாளிக்கு சொந்தமான படைப்பு தான் 96. ஆனால் அதனை பார்க்கும் அனைவரும் தங்களுக்கு சொந்தமான படமாக நினைக்க வைத்திருக்கிறது.
நான் இந்த மேடையில் பேசியவர்களை கவனித்தபோது, பெரிய மனிதர்கள் சின்னப்புள்ளதனமாகவும், சிறியவர்கள் பெரிய மனிதர்கள் போன்றும் பேசினார்கள். சிறிய வயதிலேயே இவர்களுக்கு பக்குவம் இருக்கிறது. நான் என்னுடைய அனுபவத்தின் மூலமாக தான் இந்த உலகத்தினை பார்க்கிறேன். அதை அளவுக்கோலாக வைத்து தான் இதனை பேசுகிறேன்.
இங்கு திரையுலகில் ஏராளமான பிரச்சனைகள் இருக்கிறது. அதற்காக யாரும் யார்மீது குறைச் சொல்வதற்கு ஒன்றுமேயில்லை. யாரோ ஒருவர் யாரோ ஒருவரைக் குறி வைத்து செய்யும் தவறு. இது உருவாக்கப்பட்டது. இது எல்லாம் ஒரு வட்டத்தைப் போன்றது. வட்டத்தில் எது தொடக்கம்? எது இறுதி? என்று கண்டுபிடிப்பது கஷ்டமோ, அதேப்போல் இது போன்ற பிரச்சினைகளின் தொடக்கம் எது என்று கண்டுபிடிப்பதும் கஷ்டம்.
அதற்காக இவ்விசயம் தொடர்பாக யார் மீது பழிசுமத்த விரும்பவில்லை. யாரும் இதற்கு பொறுப்பும் அல்ல. இதனை காப்பாற்ற முயற்சி செய்த லலித்குமார் முக்கியமான ஆள். தயாரிப்பாளர் நந்தகோபால் பட்ட கஷ்டத்தை நான் நேரில் பார்த்தேன். வலித்தது. ஆனால் சில சமயத்தில் வேறு வழியில்லை. ஏனெனில் இதெல்லாம் ஒரு குடும்பம். வாழ்க்கையில் இது போன்ற பிரச்சினைகள் வரும் போது நான் அடுத்தக்கட்டத்திற்கு போகப்போகிறேன். யார் மீது யார் எவ்வளவு பாரம் வைக்கப்போகிறார்களோ, யார் எவ்வளவு பாரம் தாங்குவார்களோ அவர்கள் தான் இன்னும் மேலே உயரமுடியும். என்னுடைய வாழ்க்கையில் பலமுறை இப்படி பல சம்பவங்களை கடந்து வந்திருக்கிறேன். இது என்னமோ என்னுடைய படக்குழுவினருக்கு மட்டும் நடந்த விசயமில்லை. காலங்காலமாக நடைபெற்று வந்துக்கொண்டிருக்கிறது.’ என்றார்.
பரியேறும் பெருமாள் நன்றி தெரிவிக்கும் விழாவில் பேசிய இயக்குநர் மாரி செல்வராஜ், அவர் படம் பார்க்கும் வரை எனக்கு பதற்றம் இருக்கும் என்று கூறினார். #PariyerumPerumal #MariSelvaraj
பா.ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘பரியேறும் பெருமாள்’. சமத்துவத்தையும் பேரன்பையும் அழுத்தமாக பதிவு செய்த இப்படத்திற்கு மக்கள் அளித்த மகத்தான ஆதரவிற்கு நன்றி தெரிவிக்கும் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
இந்த சந்திப்பில் தயாரிப்பாளர் பா.இரஞ்சித், இயக்குநர் ராம், இயக்குநர் மாரி செல்வராஜ், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், நடிகர்கள் கதிர், லிஜீஸ், மாரிமுத்து, “கராத்தே” வெங்கடேசன், சண்முகராஜன், ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர், படத்தொகுப்பாளர் செல்வா ஆர்.கே., கலை இயக்குநர் ராமு மற்றும் தெருக்கூத்துக் கலைஞர் தங்கராஜ் (படத்தில் பரியனின் தந்தையாக நடித்தவர்) ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் இயக்குநர் மாரி செல்வராஜ் பேசும்போது, ‘பரியேறும் பெருமாளை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்களா என்று மிகவும் பயந்தேன். ஆனால் எதிர்பார்த்ததை விட எல்லா தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்தன. குறிப்பாக பத்திரிக்கையாளர்கள் அனைவரும் பாராட்டியது மறக்க முடியாதது. அத்தனை பேருக்கும் நன்றி. எல்லோரும் முதல் படத்திலேயே இப்படியான காட்சிகளை எடுக்க முடிந்தது எப்படி என கேட்டார்கள். எல்லாமே ரஞ்சித் அண்ணா என்கிற ஒருவர் கொடுத்த நம்பிக்கை தான் காரணம். அதற்கெல்லாம் அவருக்கு நன்றி கூறப் போவதில்லை, கடைசி வரை அவர் கூடவே தான் இருப்பேன்.
என்னுடைய உதவி இயக்குநர்கள், தயாரிப்பு தரப்பினர், கேமராமேன், எடிட்டர் எல்லோருக்குமே எனது நன்றிகள். சந்தோஷ் நாராயணன் சார் இந்தப் படத்தை முழுவதுமாக புரிந்து கொண்டு வேலை செய்தார். கதிர், ஆனந்தி, யோகி பாபு எல்லோரும் படத்திற்காக முழுமையாக உழைத்தார்கள், அவர்களுக்கும் நன்றி. தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்கள், நான் பார்த்து வியந்த இயக்குநர்கள் அத்தனை பேரும் பாராட்டினார்கள்.
பரியனின் அப்பாவாக நடிக்க சரியான நபரை தேர்வு செய்ய அலைந்து திரிந்தோம். தமிழ்நாடு முழுக்க சுற்றினோம். அதன் பின்னர் நிஜத்திலேயே கூத்துக்கலைஞரான தங்கராஜை பிடித்தோம். அவரை ஒரு சோளக்கொல்லையில் நடு இரவில் சந்தித்தேன். முதலில் ஒரு ஒப்பாரி பாடலை பாட சொன்னேன். அரை மணி நேரம் அவர் பாடியது உருக வைத்தது. உடனே அவரை தேர்ந்தெடுத்தோம். படத்தில் உள்ளதற்கும், நிஜத்திற்கும் நிறைய வேறுபாடு கொண்டவர் அவர். நிஜத்தில் பயங்கரமாக கோபப்பட கூடிய ஒரு ஆள். முக்கியமான அந்த காட்சியில் அழ முடியாது என மறுத்தார், ஆனால் நான் அழுது காண்பித்ததால் நடிக்க ஒப்புக் கொண்டார். நிர்வாணமாக ஓடும் காட்சியில் நடிக்க முதலில் மறுத்தார். முழுக்கதையையும் விளக்கிய பின்னர் ஒப்புக்கொண்டார். அவர் இன்னும் படம் பார்க்கவில்லை. அவர் படம் பார்க்கும்வரை எனக்கு பதற்றம் இருக்கும்’ என்றார்.
அம்பேத்கர் புகைப்படத்தை படத்தில் காட்டினாலே மதுரையில் கலவரம் நடக்கும் என்று பலரும் சொன்னார்கள் என்று பரியேறும் பெருமாள் நன்றி தெரிவிக்கும் விழாவில் பா.ரஞ்சித் பேசியுள்ளார். #PariyerumPerumal
பா.ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘பரியேறும் பெருமாள்’. சமத்துவத்தையும் பேரன்பையும் அழுத்தமாக பதிவு செய்த இப்படத்திற்கு மக்கள் அளித்த மகத்தான ஆதரவிற்கு நன்றி தெரிவிக்கும் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
இந்த சந்திப்பில் தயாரிப்பாளர் பா.இரஞ்சித், இயக்குநர் ராம், இயக்குநர் மாரி செல்வராஜ், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், நடிகர்கள் கதிர், லிஜீஸ், மாரிமுத்து, “கராத்தே” வெங்கடேசன், சண்முகராஜன், ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர், படத்தொகுப்பாளர் செல்வா ஆர்.கே., கலை இயக்குநர் ராமு மற்றும் தெருக்கூத்துக் கலைஞர் தங்கராஜ் (படத்தில் பரியனின் தந்தையாக நடித்தவர்) ஆகியோர் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பா.ரஞ்சித் பேசும்போது, “இது கொண்டாட்டமான மனநிலை. பரியேறும் பெருமாள் போன்ற படங்கள் ஓடாது என்று பலரும் பயங்காட்டினார்கள். ஆனால் எனக்கு நம்பிக்கை இருந்தது. மனித மாண்பை மீட்டு எடுக்கிற சாதிய முரண்களை உடைத்து எடுக்கிற படங்களை நிச்சயமாக கொண்டாடுவார்கள் என்று நம்பினேன், அது நடந்தது. அம்பேத்கர் புகைப்படத்தை படத்தில் காட்டினாலே மதுரையில் கலவரம் நடக்கும் என்று பலரும் சொன்னார்கள். ஆனால் நம் மக்கள் அப்படி அல்ல, எதையும் சொல்ல வேண்டிய முறையோடு சொன்னால் ஏற்றுக்கொள்வார்கள். இது வெற்றிச் சந்திப்பு அல்ல, நன்றி அறிவிப்பு மட்டும் தான். ஏனெனில் இந்தப் படத்தை பத்திரிகையாளர்கள் பெரிதாக கொண்டாடினார்கள். ஒருமுறை எழுதியதோடு நிறுத்தி விடாமல் இன்றுவரை எழுதிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. தொடர்ந்து நீலம் புரொடக்ஷன் இதுபோன்ற படங்களை தயாரிக்கும்” என்றார்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X